தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி: தமிழக அரசு..!
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தீபாவளிக்கு மாநிலங்களில் எந்த எந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கட்டுபாடுகள் விதிக்கபட்டிருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கபட்டுள்ளது. குறிப்பாக பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.