தமிழக அரசு அதிரடி..! இனி யாராலும் வாலாட்ட முடியாது!
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பள்ளி, கல்லூரி எனக் கல்வி நிலையங்களில் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மாதம் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.அதேபோல திருச்சி என்ஐடியில் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அங்குப் பெண்கள் விடுதியில் பழுது பார்க்கச் சென்ற ஊழியர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சமீபத்தில் கூட வால்பாறை அரசு கலைக்கல்லூரியில், மாணவிகளுக்கு சில பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இப்படி மாநிலத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொலி வாயிலாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்துக் கல்லூரிகளிலும் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும், பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்ய ஆய்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாலியல் தொல்லை குறித்து புகார் வந்தால் அதில் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஒவ்வொரு கல்லூரிகளிலும் காவலர் ஒருவரை நியமித்து அங்கு நடக்கும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை உடனடியாக காவல்துறையிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் புகார் குழு அமைக்க உத்தரவிட்ட தலைமைச் செயலாளர் முருகானந்தம்,அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகார் பெட்டிகளை அமைக்கவும் உத்தரவிட்டார். மேலும், கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்காணிக்க Anti drug clubகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.