1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்திற்கு 3-வது இடம்: மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு..!

1

தமிழகத்தில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக 10,603 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தியது போக எஞ்சியதை மின்வாரியத்துக்கு விற்பனை செய்கின்றன.

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்துறை சார்பில், டெல்லியில் அண்மையில் உலக காற்று தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 2023-24ம் நிதியாண்டில் நாட்டில் காற்றாலை மின்நிலையம் அமைத்ததில் தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்ததற்காக விருது வழங்கப்பட்டது.

இவ்விருதை தமிழக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக்கிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 586 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதே காலகட்டத்தில் குஜராத் மாநிலம் 1,600 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை அமைத்து முதலிடத்தையும், கர்நாடகா 700 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை அமைத்து 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like