மியான்மரில் சிக்கிய தமிழக மீனவர்கள்! தாயகம் திரும்ப அமைச்சர் ஜெயக்குமார் நடவடிக்கை!
சென்னையில் மீன்பிடிக்க சென்று மாயமாக மறைந்து விட்டவர்களை குறித்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று 9 மீனவா்கள், காணாமல் சென்றவர்கள்.
இதுகுறித்து தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவர்களில் ஒருவரைத் தவிர் மற்ற 8 பேரும் செப்.14ல் மியான்மா் கடல்பகுதியில் அந்நாட்டு கடல்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், மியான்மரில் தற்போது உள்ள 8 தமிழக மீனவா்களையும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் செப்.28ம் தேதி விமானம் மூலம் இந்தியா அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.