நாளை தமிழக காங்கிரஸ் செயற்குழு கூடுகிறது..!
தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் சுமார் 88 பேர் கலந்து கொள்கிறார்கள். மேலிட பார்வையாளர் கிரீஷ் சோடங்கரும் கலந்து கொள்கிறார். ஏற்கனவே காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும், தற்போதைய கூட்டணி மாறும் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்தச் சூழலில், நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கூட்டணி பற்றி தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும் கூடுதல் சீட்டு கேட்க வேண்டும், ஆட்சியில் பங்கும் கேட்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்ற வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.