1. Home
  2. தமிழ்நாடு

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு..இ.கம்யூ. 2 தொகுதிகள்..!

1

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர். அதன்படி மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே தொகுதிப் பங்கீட்டை திமுக விறுவிறுப்பாக நிறைவு செய்துள்ளது. ஜனவரி இறுதியில் கூட்டணிப் பேச்சுவார்த்தையை திமுக தொடங்கிய நிலையில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், கொமதேக, மதிமுகவுக்கு தலா ஒரு தொகுதி, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தி.மு.க. கூட்டணி தொகுதி எண்ணிக்கை:

(தமிழகம் 39 - புதுச்சேரி 1)

1) தி.மு.க. - 21 தொகுதிகள். (தமிழகம்).

2) காங்கிரஸ் - 10 (9+1) தொகுதிகள் (தமிழகம் +புதுவை).

2) இ.கம்யூ.  2 தொகுதிகள். (தமிழகம்).

3) மா.கம்யூ. - 2 தொகுதிகள்.(தமிழகம்).

4) வி.சி.க. - 2 தொகுதிகள்.(தமிழகம்).

5) ம.தி.மு.க. - 1 தொகுதி.(தமிழகம்).

6) இ.யூ.மு.லீ - 1 தொகுதி.(தமிழகம்).

7) கொ.ம.தே.க. - 1 தொகுதி.(தமிழகம்).

Trending News

Latest News

You May Like