1. Home
  2. தமிழ்நாடு

இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் - தமிழக காங்கிரஸ் தலைவர்..!

1

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகியவை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

கடந்த முறை வெற்றி பெற்ற திருச்சி, ஆரணி, தோல்வியடைந்த தேனி ஆகிய தொகுதிகள் தற்சமயம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை.  அதற்கு பதிலாக கடலூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

புதிதாக காங்கிரஸ் கட்சிக்கு இந்த 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் போட்டி பலமாக இருந்து வருகிறது. மேலும் புதியவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளதால் வாய்ப்பு கேட்டு முக்கிய நிர்வாகிகள் பலர் மேலிடத்தில் மோதி வருகின்றனர். 

இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் நாளை(இன்று) இரவுக்குள் வெளியிடப்படும். தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். 

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொகுதிக்கு 3 பேர் வீதம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கட்சி தலைமையிடம் இன்று(நேற்று) ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like