1. Home
  2. தமிழ்நாடு

வரும் 23-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்..!

1

மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல் திட்டக்குழுவுக்கு மாற்றாக நீதி ஆயோக் உருவாக்கப்பட்டது. நீதி ஆயோக் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். இந்நிலையில் நடப்பாண்டு நீதி ஆயோக் கூட்டம் மே 24-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், முக்கிய பொறுப்புகளை வகிக்கும் மத்திய அமைச்சா்கள் பங்கேற்கிறார்கள்.


தொடர்ந்து, இந்த கூட்டத்டெல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 23-ம் தேதி இரவு டெல்லி செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்டெல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like