1. Home
  2. தமிழ்நாடு

இன்று கோவை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

1

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.

இன்று (5.4.25) காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் அங்கிருந்து மதியம் 12 மணிக்கு கோவை வருகிறார். கோவையில் அவருக்கு மிக சிறப்பான வரவேற்ப்பை வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இங்கிருந்து காரில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டர் சுற்றுலா பூங்காவில் முதலமைச்சர் சற்று நேரம் ஓய்வெடுக்கிறார். மாலை 5 மணிக்கு அங்கிருந்து ஊட்டி செல்கிறார். அங்கு உள்ள தமிழ்நாடு மாளிகையில் தங்கி, அதன் பின்னர் கட்சி நிர்வாகிகளை மாலை ஊட்டியில் உள்ள பெரும் தனியார் விடுதியில் சந்தித்துஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் இரவு 8 மணிக்கு தமிழ் நாடு மாளிகை வரும் முதலமைச்சர், அங்கு ஓய்வெடுக்கிறார். மறுநாள் காலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் மதியம் 12.30 மணிக்கு கோவை செல்கிறார். சில நேரம் ஓய்வெடுத்த பின்னர் மாலை 4 மணிக்கு கொடிசியாவில் நடைபெறும் வள்ளி கும்மி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

முதலமைச்சர் கோவை வருவதால் கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு நிலவும். 

Trending News

Latest News

You May Like