இன்று முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை : பாதுகாப்பு பணியில் 1900+ போலீசார்..!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தை துவக்கி வைக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும் இன்று விமானம் மூலம் கோவை வரவுள்ளார்.
அவரின் வருகையை முன்னிட்டு, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், 4 காவல் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் 19 உதவி ஆணையர்கள், 45 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1941 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுளளார்கள்.
கோவை நகரில் உள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுக்கள் தணிக்கையிலும, நகரில் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து காவல் பிரிவு அணியினர் வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.