1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் மூன்றாம் கட்ட அகழாய்வை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

1

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதே ஆண்டு செப்டம்பர் மாத இறுதி வரை பணிகள் நடைபெற்றன. அகழாய்வின் போது பல்வேறு அரிய தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து நுண்கற்காலம் முதல் வரலாற்று தொடக்ககாலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிக எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டன.மேலும் நுண்கற்கால கருவிகள், பலவகையான பாசி மணிகள், சுடு மண்ணாலான காலணிகள், பொம்மைகள், சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லுவட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என பல்வேறு பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஒட்டு மொத்தமாக 3,254 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இதையடுத்து அங்கு இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

அப்போது பழங்கால பானை ஓடுகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் கட்ட ஆய்வின் போது ஏறக்குறைய 4,660 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ளது. அகழாய்வு மேற்கொள்ளப்படும் பகுதியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அகழாய்வை வரும் 18 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

Trending News

Latest News

You May Like