மருத்துவமனைக்கு விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்..!
கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு, மேஜர் ஆபரேஷன் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 14-ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக வேலூர் வந்த முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் துரை தயாநிதியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அழகிரியிடம் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில் நேற்று(மே 8) திடீரென முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் துரைமுருகன், தனது மாப்பிள்ளை சபரீசன் ஆகியோருடன் சிஎம்சி சென்று துரை தயாநிதியின் உடல் நலம் விசாரித்திருக்கிறார்.