காளிதாஸ் ஜெயராம் - தாரிணி தம்பதியை நேரில் வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்..!
நடிகர் ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் முறை மாமன், தெனாலி, பஞ்சதந்திரம் ஆகிய படங்கள் மிகவும் பிரபலம். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் மீண்குழம்பும் மண் பானையும், பூமரம், ஒருபக்க கதை ஆகிய படங்களில் நடித்தார்.
பின்னர் சுதா கொங்குரா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்த 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி தொடரில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. அந்த படத்தில் திருநங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ’ராயன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் மாடல் அழகி தாரிணி காளிங்கராயர் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி காளிதாஸ் ஜெயராம், தாரிணி இருவருக்கும் கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சென்னையில், நடிகர் திரு. ஜெயராம் அவர்களின் மகன் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி புதுமண தம்பதியினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் திரு.ஜெயராம் அவர்களின் மகன் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி புதுமண தம்பதியினருக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu pic.twitter.com/wikJyhAcLX
— TN DIPR (@TNDIPRNEWS) December 10, 2024