1. Home
  2. தமிழ்நாடு

4 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!

Q

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள அப்பைநாயக்கன்பட்டி பகுதியில் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் உள்ள 35 அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 அறைகள் அடுத்தடுத்து இடிந்து தரை மட்டமாகின. அந்த அறைகளில் இருந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், சிவக்குமார், காமராஜ், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்பு படையினர் தேடி வருகின்றனர். மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ₹4 லட்சம் நிதியுதவி அறிவித்திருக்கிறார்

Trending News

Latest News

You May Like