1. Home
  2. தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..!

1

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியில் 1100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 50 பேர் வீதம் 11 சுற்றுகளில் வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். இந்த நிலையில் பத்தாவது சுற்றின் போது ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கிய நவீன் குமார் மாடு மார்பில் குத்தியதில் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவரை சகவீரர்கள் மீட்டு முதலுதவி அளித்து மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நவீன் குமார் உயிர் இழந்தார். ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டிலேயே வீரர் மரணம் அடைந்தது பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியது. தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க மருத்துவர்கள் தயாராகினர். ஆனால் நவீன் குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தனது ஒரே மகனான நவீன்குமார் மரணமடைந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றச் சென்ற போது உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த எனது மகனின் உடலை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் கூட பார்க்க வரவில்லை. கலாச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கிறது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடிய என மகன் உயிரிழந்ததற்கு நிதி உதவி அளிக்கவில்லை தமிழக அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி நவீன் குமாரின் தாய் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் (14.01.2025) நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், விளாங்குடியைச் சேர்ந்த திரு.நவீன்குமார் என்ற மாடுபிடி வீரர் மாடு முட்டியதில் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like