6 சிறப்பு திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

ஊட்டியில் 700 படுக்கை வசதிகள் கொண்ட நவீன மருத்துவ வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில், 1703 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 56 புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் கீழ் 15,634 பயனாளிகளுக்கு ரூ. 102.14 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
ஊட்டி மாவட்டத்திற்கு சிறப்பு திட்டங்கள் அறிவித்த முதலமைச்சர்!
நீலகிரி மாவட்டத்தில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்காக கூடலூரில் ரூ. 26.06 கோடி மதிப்பில் 300 வீடுகள் கொண்ட புதிய கலைஞர் நகரம் அமைக்கப்படும்.
பழங்குடி மக்கள் நிறைந்து வாழக்கூடிய நீலகிரி மாவட்டத்தில் அவர்களின் வாழ்வியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த அதைப் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
நீலகிரி மாவட்டம் முழுக்க இருக்கும் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில், 'எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்' எனும் சுற்றுலா முறை ரூ. 5 தொடங்கப்படும் செலவில் 10 புதிய பேருந்துகளுடன் துவங்கப்படும்.
ஊட்டியில் சுற்றுலா தளங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.20 கோடி மதிப்பீட்டில் பன்னடக்கு கார் பார்க்கிங் வசதிகள் அமைக்கப்படும்.
பழங்குடியின மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் ரூ.5 கோடியை 75 லட்சம் செலவில் 23 சமுதாய கூடங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழக்கூடிய பழங்குடியினர் பயனடையும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 200 வீடுகள் கட்டி தரப்படும்.
நீலகிரி நடுகாணியில் ரூ. 3 கோடியில் சூழலில் மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஏ.வ. வேலு, சுவாமிநாதன், மா. சுப்பிரமணியன், நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு, தி ஹிந்து நாளிதழ் குழுமத்தின் இயக்குனர் பத்திரிக்கையாளர் என். ராம், நீலகிரி மாவட்ட மக்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.