1. Home
  2. தமிழ்நாடு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து..!

1

காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் 28 கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் செயல்பட்ட விதம், தேர்தல் முடிவுக்கு பிறகு ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டணியில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக ஜூன் 1-ஆம் தேதி காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில். இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like