1. Home
  2. தமிழ்நாடு

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

1

காவிரி, முல்லைப்பெரியாறு, தென்பெண்ணை, பாலாறு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நீர்பங்கீட்டு பிரச்சினைகள் தமிழகத்துக்கும், சம்பந்தப்பட்ட நதிகள் உற்பத்தியாகும் மாநிலங்களுக்கும் இடையே பல்லாண்டுகளாய் நீடித்து வருகிறது.இந்த நிலையில் தான் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே, வட்டவடா என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியை துரித கதியில் நிறைவேற்றி வருகிறது.

முதல் கட்டமாக 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிலந்தி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரம், 120 அடி நீளத்தில் இந்த தடுப்பணை அமைக்கும் பணி வெகு வேகமாக நடந்து வருகிறது. இப்பணி முடிவுற்றால், கரூர், திருப்பூர் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் பெறுவதற்கு சாத்தியமாகாது . தமிழக மாவட்டங்களில் ஓடிவரும் அமராவதி ஆறு நீர்வழி பயன்பாடு தடைபடும்.

இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தில், 'சிலந்தி ஆற்றின் அருகே கட்டப்படும் தடுப்பணை பிரச்சனை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு விவரங்கள் மிகவும் தேவை என்பதால் இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான தோழமை உணர்வை நிலைநிறுத்த இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் வரை இந்த பணியை நிறுத்தி வைக்குமாறு கேரள அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்த வேண்டும். இந்த தடுப்பணை விவகாரம் குறித்த திட்டம் எதுவும் தமிழக அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடுமோ வழங்கப்படவில்லை. திட்டம் தொடர்பான விவரங்களை தமிழகத்தின் நீர்வளத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் கேரள நீர்வளத்துறை அதிகாரிகளும் ஏற்கனவே கேட்டுள்ளார். இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரத்தின் முழு விபரங்களை தமிழ்நாடு அரசுக்கு கேரள அரசு உடனடியாக வழங்க வேண்டும்' என சுட்டிக்காட்டி உள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like