1. Home
  2. தமிழ்நாடு

கல்லூரிகளில் புதிதாக வகுப்பறைகள், கலையரங்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

1

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 96 கோடியே 75 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக்கூடம், அணுகுசாலை, விடுதிகள், பணிமனைகள், கழிவறை தொகுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டிடம் போன்ற பல்வேறு கட்டிடங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை கிராமத்தில் அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரியில் 4 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அணுகு சாலை ஆகியவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதே போல் சத்தியமங்கலம், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தென்காசி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ. வேலு, ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like