அம்பேத்கர் குறித்து சர்ச்சைப் பேச்சு : அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி..!
அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாபேசினார். அப்போது அவர் தற்போது 'அம்பேத்கர், அம்பேத்கர்' என்று பேசுவது பேஷனாகி விட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கமாவது கிடைக்கும்.
இருந்த போதும் அம்பேத்கர் பெயரை காங்கிரசார் சொல்வது பாஜகவிற்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் உண்மையான உணர்வுகளுடன் செயல்பட வேண்டுமென்றார். இவரின் இந்த பேச்சு இந்தியா கூட்டணி மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்; சொல்ல வேண்டும்," எனப் பதிவிட்டுள்ளார்.
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) December 18, 2024
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!#BabasahebAmbedkar