1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : +2 மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

1

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் நாளை ஆரம்பமாகின்றன.. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத போகிறார்கள். தமிழ்நாட்டில், 3302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. 3200 பறக்கும் படைகளுடன், நிறைய பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைக்கப்படுள்ளன. வருகிற 22-ந்தேதி வரை இந்த தேர்வு நடக்க போகிறது.

இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”+2 பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்த கட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.

தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.

பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like