1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வேலூர் வருகை..! வெளியாக இருக்கும் புதிய அறிவிப்புகள்..!

1

வேலூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னை ரயில் நிலையத்திலிருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் பயணம் செய்கிறார். அங்கிருந்து காரில் வேலூர் மாவட்டத்திற்கு சென்று 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரணமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ள பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து ஆற்காடு வழியாக சென்று வேலூர் சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்க உள்ளார்.இதனை தொடர்ந்து அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு செல்ல உள்ளார். அங்கு அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாரை சந்தித்து பேச உள்ளார். பின்னர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். இதனை தொடர்ந்து அணைக்கட்டில் இருந்து சுமார் 2 கீலோ மீட்டர் தூரத்திற்கு ரோடுஷோ நடத்த உள்ளார். இந்த ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்து மனுக்களை பெற உள்ளார். மேலும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2025-26ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இதன் மூலம் குடியாத்தம் ,கீழ்வைத்தியனான் குப்பம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயன்பெறும் வகையில் உள்ளது.இதனையடுத்து வேலூர் மாவட்டம் - அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அறிவாலயம் மற்றும் திருவுருவச் சிலையை வருகின்ற 25.06.2025 அன்று கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.

அதற்காக நடைபெற்று வரும் பணிகளை கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டார். உடன் வேலூர் மாவட்ட செயலாளர் திரு.A.P.நந்தகுமார் MLA அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் திரு.மு.பாபு ஒன்றிய செயலாளர்கள், துணை மேயர் திரு.M.சுனில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து மீண்டும் வேலூர் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஜூன் 26 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். அங்கு ஜோலார்பேட்டையில் சுமார் 2 கீலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் சாலையில் இருப்புறங்களில் உள்ள மக்களை சந்தித்து பேச உள்ளார். மேலும் அவர்களிடம் பெறப்படும் மனுக்களை பெற்று தீர்வு கான உள்ளார். இதனை தொடர்ந்து ஜோலையார் பேட்டையில் உள்ள புரணமைக்கப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.

தொடர்ந்து மக்களை சந்தித்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த பட உள்ளார். இதனை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like