1. Home
  2. தமிழ்நாடு

10 லட்சம் நிவாரணத்துடன் கூடுதல் நிவாரண உதவி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

1

கள்ளச் சாராயத்தால் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறியதற்காக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''பெற்றோர் இருவரையும் இழந்து வாடும் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை ஆகும் செலவுகளை அரசே முழுமையாக ஏற்கும், 18 வயது ஆகும் வரை அவர்களுக்கு மாதாமாதம் ரூ. 5 ஆயிரம் பராமரிப்புத் தொகை வழங்கப்படும். வங்கியில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி செலுத்தப்படும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை வழங்கப்படும். 

பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் ரூ.3 லட்சம் வைப்பு நிதி செலுத்தப்படும். இந்தக் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும். விஷச் சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வரை கூடுதல் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த சம்பவம் குறித்து அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like