1. Home
  2. தமிழ்நாடு

தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் இரண்டாம் பாகம் வெளியீடு..!

1

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தன்னுடைய கணவர் குறித்தும் தங்களுடைய இல் வாழ்க்கை குறித்தும் குமுதம் சினேகிதி இதழில் ஐந்து ஆண்டுகளாக தளபதியும் நானும் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார். வாசகர்களின் மிகுந்த வரவேற்பு பெற்ற அந்த தொடரில் மு க ஸ்டாலின் மற்றும் துர்கா ஆகியோருடைய இல் வாழ்க்கை, ஸ்டாலினின் அரசியல் பயணம், அவர் சந்தித்த அரசியல் நெருக்கடிகள், மிசா கொடுமைகள், அவர் சந்தித்த பிரச்சனைகள், நெருக்கடிகள், சாதனைகள், குடும்ப நிகழ்வுகள் என பல்வேறு சம்பவங்களை சுவாரஸ்யமாக தொடராக கொண்டு வந்திருந்தார்.

குடும்ப நிகழ்வுடன் சேர்ந்து அரசியல் நிகழ்வும் இருந்ததால் வாசகர்களுக்கு அது புதுமையான உணர்வைத் தந்தது. இந்த புத்தகம் உயிர்மை பதிப்பகத்தால் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அவரும் நானும் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. மீனா குமாரி வெளியிட துர்கா ஸ்டாலினின் பேத்திகளான தன்மயா சபரீசன், நிலானி உதயநிதி ஆகியோர் பெற்றிருந்தனர்.

சென்னையில் உள்ள குமாரராஜா முத்தையா ஹாலில் புத்தகம் வெளியிடப்பட்ட போது ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்திருந்தார். நிகழ்வுக்கு மு.க.ஸ்டாலின், சபரீசன், துரைமுருகன் டி ஆர் பாலு, சேகர் பாபு, மா சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா, கே என் நேரு, காந்தி, எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழச்சி தங்க பாண்டியன் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இந்நிலையில் அவரும் நானும் புத்தகத்தின் இரண்டாவது பாகம் மீண்டும் உயிர்மை பதிப்பகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புத்தகத்திலும் குடும்ப நிகழ்வுகள் அரசியல் சம்பவங்கள் என ஏராளமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

Durga stalin avarum naanum

 

அவரும் நானும் இரண்டாம் பாகம் வெளியீடு!

கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை (சனி) ஜூலை 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது இந்த நூலின் முதல் பிரதியை தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சுப்ரியா சூலே வெளியிட எழுத்தாளர் சிவசங்கரி பெற்று கொள்கிறார். விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், பத்திரிகையாளர் லோகநாயகி, முன்னாள் நீதிபதி பவானி சுப்பராயன், டாஃபே குழும நிர்வாக இயக்குனர் மல்லிகா சீனிவாசன், ஜி ஆர் ஜே நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

முதல் புத்தகத்தில் இடம்பெறாத புதிய தகவல்கள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது. முதல் பாகம் வெளியாகி ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அதன் பின்னர் தான் கலைஞர் மறைவு, மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றது, முதலமைச்சராக அரியணை ஏறியது என பல முக்கிய நிகழ்வுகள் நடந்தன. அந்த சம்பவங்களின் போது மு.க.ஸ்டாலினின் எண்ணவோட்டங்களை துர்கா ஸ்டாலின் எழுத்தில் கொண்டு வந்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like