வைரமுத்து பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து..!

கவிஞர் வைரமுத்துவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் கே என் நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
அதன்பின் வெளியே வந்த வைரமுத்து, அவரது இல்லத்திற்கு அருகே உள்ள பூங்காவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனிடையே, பிறந்தநாளை முன்னிட்டு வைரமுத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள பதிவில், கவிப்பேரரசு வைரமுத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே! உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கவிப்பேரரசு @Vairamuthu அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) July 13, 2023
தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே!
உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!#HBDVairamuthu pic.twitter.com/21VQvorjky