1. Home
  2. தமிழ்நாடு

நாளை விழுப்புரம் வர இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் பயணம் ரத்து..!

1

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் அவர் ஏற்கனவே அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கள ஆய்வை முடித்து உள்ளார். இதனை தொடர்ந்து 2 நாள் சுற்றுப் பயணமாக 4-ம் கட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வர இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் களஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, 28.11.2024 மற்றும் 29.11.2024 ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சி மற்றும் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like