1. Home
  2. தமிழ்நாடு

நாளை கோவை வரும் முதலமைச்சர் ஸ்டாலினின் பயண விவரம் வெளியானது..!

1

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (9.8.2024) கோவை வருகிறார்.

அவரின் பயனவிவரம் குறித்த தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி, நாளை காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வரும் முதலமைச்சர் அங்கிருந்து முதலில் கோவை அரசு கலை கல்லூரிக்கு செல்கிறார். அங்கு தமிழ் புதல்வன் எனும் திட்டத்தை துவக்கி வைக்கவுள்ளார். இங்கிருந்தே கலைஞர் நினைவு நூலகத்திற்கு அடிக்கல் நாட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அங்கிருந்து 11.45 மணிக்கு கிளம்பி உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கவுள்ளார்.  அதன்பின் 12.05 மணிக்கு அங்கிருந்து கிளம்பி கணியூர் செல்கிறார். அங்கு கட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள கலைஞரின் 8 அடி வெண்கல சிலையையும், 116 அடி கொடி கம்பத்தையும் திறந்து வைக்கிறார். முடிவில் 12.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்து, சென்னை புறப்படுகிறார். 

Trending News

Latest News

You May Like