50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் வெற்றி - முதல்வர் ஸ்டாலின்..!
2 நாள் பயணமாக திருவாரூருக்கு நேற்று சென்றார் தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சன்னதி தெருவில் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஒவ்வொரு வீடுகளுக்கு நடந்தே சென்ற முதலமைச்சர் மக்களிடம் தி.மு.க. அரசின் சாதனை எடுத்துக்கூறி, பரப்புரையில் ஈடுபட்டார்.
எதிர்பாராத விதமாக திடீரென முதலமைச்சர் தங்களது வீட்டிற்கு வந்ததும் செய்வதறியாத பொதுமக்கள் ஆனந்த பெருக்குடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மக்களிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர், வீட்டில் கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். மேலும், சில வீடுகளில் முதலமைச்சருக்கு தேனீர், இனிப்பு கொடுத்து மக்கள் வரவேற்றனர். சன்னதி தெரு முழுவதும் நடந்தே சென்று பரப்புரையில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கிரு டாலின் அங்கிருந்து கார் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் நடைபெறும் விழா இடத்திற்கு புறப்பட்டார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது! இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்! தமிழ்நாடு முழுவதுடன் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினர்களையும் 30,975 குடும்பங்களையும் கழகத்தில் இணைத்து முதலிடத்தில் முந்தியிருக்கிறது #திருச்சுழி சட்டமன்றத் தொகுதி! மாவட்டக் கழகச் செயலாளர் @TThenarasu உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்! திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! உங்கள் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம்! வெற்றி விழாவில் சந்திப்போம்!
50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!
— M.K.Stalin (@mkstalin) July 10, 2025
இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்!
தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த… pic.twitter.com/098bwfTCdF