ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்..!
தமிழகத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பலரும் கருத்துக்கள் மற்றும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்கட்சிகள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் இல்லத்திற்கு தமிழக முதல்வர் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது உறுதியளித்தார்.