தானியங்கி காரில் பயணித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
ஓட்டுநர் இல்லாத ஜாகுவார் நிறுவனத்தில் தானியங்கி காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார்.
அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்கட்டமாக சான்பிரான்சிஸ்கோ சென்றார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழர்கள் உடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று (செப்ட்மபர் 2) சிகாகோ செல்கிறார்.
அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தொழில் முதலீட்டுக்கு தமிழ்நாடு வருமாறு அழைப்பு விடுக்கிறார். பல்வேறு தொழிற்சாலைகளை அவர் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7ஆம் தேதி சிகாகோவாழ் தமிழர்களை சந்திக்கிறார். பயணத்தை முடித்துக்கொண்டு, 14ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓட்டுநர் இல்லா தானியங்கி காரில் பயணித்தார். ஜாகுவார் நிறுவனத்தின் இந்த காரில் முதல்வர் ஸ்டாலின் பயணித்த காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.