1. Home
  2. தமிழ்நாடு

இன்று விருதுநகர் வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்..!

1

தமிழக முதல்வரும், திமுக தலைவமருமான முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது.,

“நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்கவிருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கட்சிப் பணிகளையும் ஆய்வு செய்வேன். கோவையில் பொதுமக்களின் மகிழ்ச்சியையும் உடன்பிறப்புகளாம் உங்களின் உற்சாகத்தையும் கண்டேன். நெஞ்சம் நிறைந்தேன்.  

மக்களின் பேரன்பில் கோவை மாவட்ட கள ஆய்வு மகிழ்வாக அமைந்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை வழங்கி, நவம்பர் 9, 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப் பணியினை மேற்கொள்கிறேன். கோவையில் தொடங்கினேன்!  தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன்!" என்று அவர் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like