1. Home
  2. தமிழ்நாடு

வரும் 27ம் தேதி அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

1

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து ஏற்கெனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயா்த்துவதே எங்களது அரசின் லட்சியம். தமிழ்நாடு என்பது பண்பாட்டின் முகவரியாக இருந்தது, இருந்து வருகிறது. அத்தகைய தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலா்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக உருவாக்குவதே எங்களது குறிக்கோள். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரது ஒத்துழைப்பையும் கோருகிறேன். தொழில்புரட்சி 4.0 மின் வாகனங்கள் உற்பத்தி, சூரிய மின்சக்தி கலன்கள், காற்றாலை கலன்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையங்கள், மின்னணு வன்பொருள்கள் உற்பத்தி ஆகிய துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில்துறைப் புரட்சி 4.0 என்று அழைக்கப்படும் நான்காவது தொழிற்புரட்சி நமது மாநிலத்துக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகும்" என்று கூறியிருந்தார்

சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சில முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை உறுதி செய்திருந்தார். இதனையடுத்து இம்மாத இறுதியில் அவர் அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த பயணத்தில் முதலீட்டாளர்களை சந்தித்து பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதாவது ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதாக, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like