1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாத இறுதியில் 3 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி, குமரி பயணம்..!

1

முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 29‑ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி செல்கிறார். அங்கு ரூ. 30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பார்க் கட்டடத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 30‑ம் தேதி காலை தூத்துக்குடியில் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி செல்லும் முதல்வர், திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி குமரியில் இரு நாள்கள் வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளதையொட்டி அதில் கலந்துகொள்கிறார்.

மேலும், அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ. 37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார்.

Trending News

Latest News

You May Like