1. Home
  2. தமிழ்நாடு

வரும் 5ம் தேதி ஊட்டிக்கு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்..!

1

ரூ. 499 கோடி மதிப்பில் ஊட்டியில் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் அதிநவீன உயர்தர சிகிச்சை கருவிகளுடன் 700 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் இதில் பழங்குடியினருக்கு என பிரத்தியேகமாக 50 படுக்கை வசதிகள் இடம்பெறுள்ளன. இத்துடன் நீலகிரியில் புதிதாக 16 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது. 

இதை திறந்து வைக்க வரும் ஏப்ரல் 5ம் தேதி ஊட்டிக்கு வருகை தர உள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். திறப்பு விழா 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் கோவைக்கு 6ம் தேதி வருகிறார்.  கோவை கொடிசியாவில் வள்ளி கும்மியாட்ட கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடன கலைஞர்களுக்கு விருதுகளை வழங்க உள்ளார். 6ம் தேதி கோவையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பின்னர் சென்னை திரும்புகிறார்.

Trending News

Latest News

You May Like