1. Home
  2. தமிழ்நாடு

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்..!

1

543 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.இந்த நிலையில் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக 375 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் அப்படியே மாறி இருக்கிறது. பெருவெற்றி பெறும் என நினைக்கப்பட்ட பாஜக தற்போது தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழலில் உள்ளது. அந்தக் கட்சி கூட்டணி தற்போது 295 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

நிதீஷ்குமார் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் தயவில் தான் பாஜக இனி ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையே ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அந்தக் கூட்டணி தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. 230க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் நிதிஷ்குமார் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை அழைத்தால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அதற்கான பேச்சு வார்த்தைகளை அந்த கூட்டணியில் இருக்கும் மூத்த தலைவரான சரத் பவர் தொடங்கி இருக்கிறார். நிதீஷ் குமாரிடமும் சந்திரபாபு நாயுடுவிடமும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தற்போது பாஜக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இன்று டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே இந்தியா கூட்டணி தலைவர்கள் முகாமிட்டிருக்கும் நிலையில் அவர்களுடன் ஆட்சி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like