1. Home
  2. தமிழ்நாடு

ஜூன் 1-ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

1

இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதில் 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.  இதனையடுத்து ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது.  இதனையடுத்து ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

பாராளுமன்ற மக்களவை தேர்தல் முடிவடைய உள்ள நிலையில்,  இன்டியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனையொட்டி கூட்டணியில் உள்ள 28 கட்சிகளுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஜூன் 1-ம் தேதியுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நிறைவடைய உள்ள நிலையில்,  அவரும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூன் 1-ம் தேதி காலை 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார் முதல்வர்  மு.க.ஸ்டாலின்.

Trending News

Latest News

You May Like