இன்று மாநில கல்வி கொள்கையை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்..!
ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில், மாநில கல்விக் கொள்கை உருவாக்க, 14 பேர் கொண்ட குழு 2022ல் உருவாக்கப்பட்டது. இந்த குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம், 2024 ஜூலையில் சமர்ப்பித்தது. இதில், 3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது. இருமொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த கல்விக் கொள்கையை முதல்வர் இன்று (ஆக.08) வெளியிட உள்ளார்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், “மாநில கல்விக் கொள்கை அறிக்கையானது உயர்கல்வி, பள்ளிக்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பள்ளிக்கல்விக்கான அறிக்கையை முதல்-அமைச்சர் வெளியிடுகிறார். இதில் சாத்தியம் உள்ள திட்டங்கள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்தனர்.