நாளை மறுநாள் ரெயில் மூலம் காட்பாடி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

வருகிற 25, 26 ஆம் தேதிகளில் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நாளை மறுநாள் சென்னை சென்ட்ரலில் இருந்து ரெயில் மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி செல்கிறார். கள ஆய்வை முடித்துவிட்டு ஜூன் 26 ஆம் தேதி திருப்பத்தூரில் இருந்து ரெயில் மூலம் முதல்வர் சென்னை திரும்புகிறார்.
இந்த ஆய்வு பயணத்தின்போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.