1. Home
  2. தமிழ்நாடு

நாளை பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

1

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்கா சென்றார். அங்குச் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகர்களில் சுற்றுப்பயணம் செய்து 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 14-ந்தேதி அவர் சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாகப் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்” என்று கூறினார்.

இந்த நிலையில் நாளை மறுநாள் பிரதமர் மோடியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி தரப்பிலிருந்து இதுவரை நேரம் வழங்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் நாளை (செப். 20) பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதி, மெட்ரோ ரெயில் திட்ட நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார்.

Trending News

Latest News

You May Like