1. Home
  2. தமிழ்நாடு

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்..!

1

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110- ன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பேரவையில் முதலமைச்சர் கூறியதாவது, “தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய அளவில் முத்திரைப் பதித்து, உலக அளவில் புகழ் பெற்றவர். பத்ம பூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள அவரது நினைவைப் போற்றுக்கிற வண்ணம், தமிழக அரசு சார்பில், அறிவிப்பை வெளியிடுகிறேன்.

தஞ்சை மாவட்டம், ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும். அதேபோல், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியல் பயிலும் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவர்களுக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like