முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தேதி அறிவிப்பு..!

சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்.10 ஆம் தேதி 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது விவாதிக்கப்படவுள்ளது.
பிப்ரவரி 10ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான அம்சங்கள் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.