தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு..!

ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று துவக்க உரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்படுவதாக ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரானது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளித்தார். இதில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சந்தித்து பேசினார். இரவு விருந்தில் பங்கேற்ற போது அமெரிக்க அதிபரை சந்தித்து பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பின் போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Attended the #G20Dinner at Kaveri Table hosted by Hon'ble President of India @rashtrapatibhvn. @POTUS @narendramodi pic.twitter.com/AbT5PenVru
— M.K.Stalin (@mkstalin) September 10, 2023
Attended the #G20Dinner at Kaveri Table hosted by Hon'ble President of India @rashtrapatibhvn. @POTUS @narendramodi pic.twitter.com/AbT5PenVru
— M.K.Stalin (@mkstalin) September 10, 2023