தமிழக முதல்வர் ஸ்டாலின் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீர் சந்திப்பு..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 3 நாட்கள் ஓய்வுக்குப்பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகம் வந்து வழக்கமான பணிகளை தொடங்கினார்.
இதனிடையே, மருத்துவமனை சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, முதல்-அமைச்சரின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்குப்பின் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
முதல்-அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். கவின் படுகொலையில் அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். ஆணவக்கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினேன். 2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை.
என்றார்.