1. Home
  2. தமிழ்நாடு

கலைஞரின் 5வது நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி..!

1

திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக திரைக்கதை வசனகர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்படத் தயாரிப்பாளராக தலைசிறந்த நிர்வாகியாக, தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கி வருபவர் கலைஞர்.

திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர், அண்ணா அவர்களோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்ட  கலைஞரின் 5வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,  பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி முன்னணியினர் கலந்து கொள்ளும் “அமைதிப் பேரணி”, ஆகஸ்ட்-7 அன்று நடைபெற உள்ளது.

காலை 8.00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள  கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like