1. Home
  2. தமிழ்நாடு

கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

1

நெம்மேலியில் ரூ.1516.82 கோடி மதிப்பில் தினசரி 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.இந்தியாவின் மிகப்பெரிய கடல்நீரை உட்கொள்ளும் குழாய்ஆகும். 

இந்நிலையத்தில் இருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வகையில், 48.10 கி.மீநீளத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2003ம் ஆண்டு நெம்மேலி மற்றும் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் குடிநீர் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் நெம்மேலியில் கூடுதலாக ரூ.1516.82 கோடி செலவில் 2-வது சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. தினமும் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மிகப்பெரிய குழாய்கள் அங்கு பதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நெம்மேலியில் இன்று ரூ.2,465 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆலையின் மூலம் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர். 95 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து , ரூ.2,058 கோடியில் 40 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

Trending News

Latest News

You May Like