1. Home
  2. தமிழ்நாடு

திமுகவினருக்கு இனிப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

1

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.


இதில் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 69,856 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் சி அன்புமணி 30,421 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் அபிநயா 5,918 வாக்குகளை பெற்றுள்ளார். இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 39,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

இதனைக் கொண்டாடும் விதமாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை பெற்று வரும் நிலையில், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்

Trending News

Latest News

You May Like