எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

கொல்கத்தாவை சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷித் இந்தியாவின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவித்துள்ளது. ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டு பத்திரமும் கொண்டது பாரதிய பாஷ விருது. வருகிற 1-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ள விழாவில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்பட உள்ளதாக பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பாரதிய பாஷா விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
இந்திய அளவில் புகழ்மிக்க #BharatiyaBhashaParishad அமைப்பின் விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் பாராட்டுகள்! சமகாலத் தமிழிலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட முகமாக விளங்கி, குறிப்பிடத்தக்க பல படைப்புகளை அளித்து, #SahityaAkademi, #இயல், #கலைஞர்_பொற்கிழி உள்ளிட்ட பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அவரது எழுத்துப்பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என நம்புகிறேன்.
தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும், மானுடத்தின் மேன்மைக்கும் உரமாகும் மேலும் பல படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.