அருட்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
தி.மு.க கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருச்சி புனித வளனார் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முதலிய பல சான்றோர்களை உருவாக்கிய அருட்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை சே.ச அவர்கள் (101) வயது மூப்பின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.
ஆசிரியப் பணியிலும் இறைத்தொண்டிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார் அருட்தந்தை சின்னத்துரை. அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், மாணவர்களுக்கும், அவரால் பயிற்றுவிக்கப்பட்ட அருட்பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.