1. Home
  2. தமிழ்நாடு

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

1

நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு சினிமா, சின்னத்திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நடிகர் மாரிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து பல்லாண்டு உதவி இயக்குநராக பணிபுரிந்து இயக்குநர் ஆனவர் மாரிமுத்து.

ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும் சின்னத்திரையிலும் தனது நடிப்பால் தமிழ்நாட்டில் அறிமுகமானவராக புகழ் பெற்றார். இவரது பேச்சுக்கள் மூடநம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன. அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரை நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

1

Trending News

Latest News

You May Like