1. Home
  2. தமிழ்நாடு

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..! தலா ரூ.5 லட்சம் நிதியுதவி..!

1

கன்னியாகுமரியில் புத்தன்துறை தேவாலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது .கடந்த 10 நாள்களுக்கு மேலாக நடைபெறும் திருவிழாவையொட்டி, இன்று இரவு தேர்பவனி விழா நடைபெற இருந்தது. எனவே இதற்காக தேவாலய தேரை அலங்கரிக்கும் பணி நடந்தது.

அப்போது ராட்சத இரும்பு ஏணியை அலங்கார பணிக்காக அங்கிருந்த 4 பேர் நகர்த்தி கொண்டு சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியில் ராட்சத ஏணி உரசியதாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் பாய்ந்து 4 பேரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனா்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டபடி ஓடினா். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வந்த போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல் அமைச்சர் முக ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான வெளியான அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவரும் நிலையில் இன்று (1-3-2025) மாலையில் நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை சாலையின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, இனயம் புத்தன்துறையைச் சேர்ந்த திருவாளர்கள் விஜயன் (வயது 52) த/பெ. தனிஸ்லாஸ், சோபன் (வயது 45) த/பெ. பெர்னின், மனு (வயது 42) த/பெ. ஒஸ்மான் மற்றும் ஜெஸ்டிஸ் த/பெ. விக்டர் (வயது 35) ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Trending News

Latest News

You May Like